உருளையன்பேட்டையில் தார் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்த MLA

82பார்த்தது
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தசாலை பாரதிபுரம் மெயின் ரோடு சுமார் 500 மீட்டர் உள்ள சாலை குண்டும் குழியுமாக சேதம் அடைந்தும் சிதலமடைந்தும் இருப்பதாக அப்பகுதி மக்களிடம் இருந்து புகார் வந்தது. அதனடிப்படையில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நேரு அவர்கள் முயற்சியால் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு மூலம் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்றும் மழை காலங்களில் மழை நீர் சரியாக வெளியேறும் வகையில் வாட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதா என்றும் புதிதாக அமைக்கப்படும் சிமெண்ட் சாலை தரமாக உள்ளதாக என நேரு எம். எல். ஏ நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு செயற்பொறியாளர் சீனிவாசன், நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சிவபிரகாசம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும். நகராட்சி அதிகாரிகளும் மேலும் அப்பகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களும், நிர்வாகிகளும் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி