புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது

79பார்த்தது
மீன்களின் இனப்பெருக்கத்தை கருத்தில்கொண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ஆம் தேதிவரை 61 நாட்கள் மீன்பிடி தடைகாலமாக நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டு இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் துவங்கியது. மீன்பிடிப்பை முறைப்படுத்தி, கடலில் உள்ள மீன் வளத்தை சிறந்த முறையில் மேலாண்மை செய்வதற்கும் ஏதுவாக இத்தடை விதிக்கப்படுகிறது. அதன்படி புதுச்சேரி கடற்பகுதிகளில் இந்தாண்டு இன்று 15-ந் தேதி முதல் ஜூன் 14 வரை (2 நாள்களும் உள்பட) 61 நாட்களுக்கு விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

தடைக்காலங்களில் கனகசெட்டிக்குளம் மீனவ கிராமம் முதல் மூர்த்திக்குப்பம் கிராமம் வரையிலும், காரைக்கால் பிரதேச கடல் பகுதி, ஏனாம் பிராந்திய மீன்பிடி பகுதிகளிலும் விசைப்படகுகளைக் கொண்டு மீன்பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளை உள்பட அனைத்து வகை படகுகள் குறிப்பாக இழுவலை கொண்டு விசை படகில் மீன்பிடிப்பது தடை செய்யப்படுகிறது. பைபர் படகிலும் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக துறைமுக வளாக மீன்பிடித் துறைமுக துவாரத்தில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள் தங்களது படகு மற்றும் வலைகளை சீரமைக்கும் பணிகளை தற்போது துவக்கி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி