குஜராத்தில் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கியதாக கூறப்படும் துவாரகா நகரம் குறித்த ஆராய்ச்சியை இந்திய தொல்லியல் ஆய்வகம் தொடங்கியுள்ளது. 5 பேர் கொண்ட தொல்லியல் நிபுணர் குழு இதற்காக ஆழ்கடலில் இறங்கி தொல்பொருள் தடயங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். துவாரகாவிலிருந்து சற்று தூரத்தில் துவாரகா தீவு உள்ளது. முதலில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் ஆட்சி செய்த துவாரகா கடலில் மூழ்கிய சமயம் அவர் விருப்பப்படி கடலில் மூழ்காமல் எஞ்சியிருந்த பகுதிதான் துவாரகா தீவு என நம்பப்படுகிறது.