குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் தேனீர் விருந்து அளித்தார். இந்த தேனீர் விருந்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லஷ்மிநாராயணன், நமச்சிவாயம், திருமுருகன், சபாநாயகர் செல்வம், செல்வகணபதி எம். பி, சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சி சட்டமன்ற தலைவர் சிவா தலைமையிலான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், என். ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த தேனீர் விருந்தில் கலந்து கொண்டு தவில் நாதஸ்வர கச்சேரியில் ஈடுபட்ட பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள தட்சனாமூர்த்திக்கு துணை நிலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.