புதுச்சேரி லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் ஏகதின லச்சார்ச்சனை

83பார்த்தது
புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவர் கோவிலில் 13-ம் ஆண்டு ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது. கார்த்திகை மாத ஞாயிறன்று எம்பெருமாள் தனது மூன்றாவது கண்ணை திறந்து பார்ப்பதாக ஐதீகம். இதையொட்டி இக்கோவிலில் எழுந்தருளியுள்ள 11 நரசிம்மர் எம்பெருமான்களுக்கு ஸ்ரீ நரசிம்ம ஸகஸ்ரநாம அர்ச்சனை, ஏகதின லட்சார்ச்சனையாக நடைபெற்றது. பயநிவர்த்தி, தம்பதிகள் ஒற்றுமை, புத்திரபராப்தி, தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட சகல பலன்கள் தரும் இந்த லட்சார்ச்சனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி