மதுரை மத்திய சிறையில் எழுதுபொருள்கள் உற்பத்திக்கு ரூ.1.63 கோடியில் மூலப்பொருள்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கடலூர் மத்தி சிறை காவல் கண்காணிப்பாளர் உள்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மத்திய சிறைத்தறை நிர்வாகம் முலம் எழுது பொருட்கள் உற்பத்திக்கான மூலப் பொருட்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து புகார் எழுந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.