கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ராஜேஷ் என்பவர் பெரிய துணிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் இன்று (டிச. 15) திடீரென பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது. சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான ஆடைகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்.