சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்த முன்னாள் ஐஜி மகள்

79பார்த்தது
சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்த முன்னாள் ஐஜி மகள்
தந்தையை போன்று சேவையாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தினால் விடா முயற்சியால் சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதலிடத்தை பெற முடிந்ததாக மருத்துவர் வினோதினி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவராக பணிபுரியும் வினோதினி சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் 64வது இடத்தையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதலிடத்தையும் பிடித்து சாதித்து காட்டியுள்ளார்.

புதுச்சேரி காவல் துறையில் ஐஜி யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சந்திரன் இவரது மகள் வினோதினி 12 ஆம் வகுப்பில் அதிகமதிப்பெண் எடுத்து புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து மருத்துவராகி கடந்த 8 ஆண்டுகளாக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வருகின்றார்.

சிவில் சர்வீஸ் தேர்வை 4 முறை முயற்சி செய்து 5 வது முறையாக தேர்ச்சி பெற்றுள்ளார் இது குறித்து அவர் கூறும்போது தனது தந்தை காவல் துறையில் இருந்தபோது அவரது சேவையினால் பலர் பயணடைந்துள்ளதை பார்த்துள்ளேன் ஆகவே எனது பணியும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது சிறுவயதில் இருந்து ஆசையாக இருந்தது. ஆனால் நான் மருத்துவரானேன் மருத்துவத்திலும் நிறைய சேவை செய்ய வேண்டும் என எண்ணினேன் இருப்பினும் ஒரே துறை சார்ந்த சேவையாக இல்லாமல் இன்னும் பிற துறைகள் மூலம் மக்களுக்கு பணிபுரிய வேண்டும் என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி