புதுச்சேரியில் கொசுத்தொல்லை அதிகரித்து வரும் நிலையில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா விழிப்புணர்வு பிரசாரத்தை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது. இதற்காக ஆட்டோக்கள் மூலம் பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த பிரசாரத்தை சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குனர்கள் ரகுநாதன், ஆனந்தலட்சுமி, உதவி இயக்குனர் வசந்தகுமாரி உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த ஆட்டோ பிரசாரம் புதுவை பகுதிகளில் 15 நாட்களுக்கு நடைபெற உள்ளது.