காரைக்கால் அடுத்த கோவில் பத்து பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் பெருமாள் திருக்கோயிலில் இன்று(அக்.5) புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வைகுண்ட நாதனாக ஸ்ரீ கோதண்டராமர் சேவை சாதிக்கிறார். முன்னதாக கோதண்டராமர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரணை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.