காரைக்கால் மாவட்டத்தில் சட்டவிரோதமான பேனர்கள், சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காரைக்கால் மாவட்ட போராட்ட குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் அன்சாரிபாபு தலைமையில் காரைக்கால் மக்கள் போராட்டக்குழுவினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் அவர்களிடம் உறுதியளித்தார்.