காரைக்கால் அடுத்த திருவேட்டக்குடியில் வசித்து வந்த சுதந்திரப் போராட்ட தியாகி ராமச்சந்திரன் அவர்கள் இறைவனடி சேர்ந்ததை முன்னிட்டு இன்று (அக்.,1) மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆட்சியர் மணிகண்டன் அவர்கள் இல்லத்திற்குச் சென்று அன்னாரின் திருஉடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். மத்திய அரசின் தாமரபத்திரா உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள இவர் மத்திய அரசு சார்பில் கவரவிக்கபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.