காரைக்காலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 07 ஆம் தேதி நகரின் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று (செப்.9) ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக விநாயகர் ஊர்வலம் நிகழ்ச்சி ஏழை மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் கடலில் கரைக்கப்பட்டது. விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.