பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என துணை முதல்வர் உதயநிதி கூறியுள்ளார். ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், புயல் இன்னும் கரையை கடக்கவில்லை. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். கடந்த காலங்களில் ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டு வந்திருக்கின்றோம். இப்போதும் ஒற்றுமையுடன் செயல்படுவோம். மீண்டு வருவோம் என்று பேட்டியளித்துள்ளார்.