பிரதமர் மோடியின் சொத்து விவரங்கள்

20983பார்த்தது
பிரதமர் மோடியின் சொத்து விவரங்கள்
மக்களவை தேர்தலில் 3வது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, இன்று (மே 14) வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், தனக்கு சொந்தமாக வாகனம் எதுவும் இல்லை என பிரதமர் மோடி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். மேலும் ரூ.2.67 லட்சம் மதிப்புள்ள 4 தங்க மோதிரங்கள், ரொக்கமாக ரூ.52,920 வைத்துள்ளதாகவும், அவரின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி என தெரிவித்துள்ளார். 2019-ஐ விட இந்த தேர்தலில் மோடியின் சொத்து மதிப்பு ரூ.50 லட்சம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் பெயரில் அசையா சொத்துகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி