சலூன் கடையில் தாடியை ட்ரிம் செய்த ராகுல் காந்தி

64பார்த்தது
சலூன் கடையில் தாடியை ட்ரிம் செய்த ராகுல் காந்தி
மக்களவை தேர்தலுக்காக ராகுல் காந்தி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், ரேபரேலியில் முகாமிட்டு அவரது சகோதரி பிரியங்கா காந்தி ராகுலின் வெற்றிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அங்குள்ள உள்ளூர் சலூன் கடையில் நேற்று தனது தாடியை ட்ரிம் செய்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி, “தேர்தல் ஏற்பாடுகள் முடிந்துவிட்டன, ஆனால் முடி வெட்டுவதும் அவசியம்.” என பதிவிட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி