சர்ச்சைக்குள்ளான முருகன் சிலை! கோயில் நிர்வாகம் அதிரடி முடிவு

593பார்த்தது
சர்ச்சைக்குள்ளான முருகன் சிலை! கோயில் நிர்வாகம் அதிரடி முடிவு
சேலம் மாவட்டத்தில் ராஜ முருகன் கோயிலில் 56 அடி முருகன் சிலை சமீபத்தில் அமைக்கப்பட்டது. சிலையின் உடல் அமைப்பு மற்றும் முக அமைப்பு வித்தியாசமாகவும் சரியில்லாமலும் இருந்தது விமர்சனத்தை கிளப்பியது. முனீஸ்வரன் சிலை மட்டுமே செய்ய தெரிந்த நபர் முருகன் சிலையை வடிவமைத்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பக்தர்களின் கோரிக்கைக்கு இணங்க முருகன் சிலையை புனரமைக்க கோயில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.