குளத்தில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் துடிதுடித்து பலி

72பார்த்தது
குளத்தில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் துடிதுடித்து பலி
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கோணலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி திருப்பதி. இவரது மகன் கமலேஷ் (6), அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் (மார்ச் 5) மாலை கமலேஷ் அதே பகுதியில் உள்ள குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த குளத்திற்குள் தவறி விழுந்தார். நீரில் முழ்கிய சிறுவன் மூச்சுத் தினறி உயிரிழந்தான். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி