முதலில் இரண்டு, மூன்று முறை நிலத்தை நன்றாக உழவேண்டும். நிலத்தில் ஓரளவிற்கு ஈரப்பதம் இருக்கவேண்டியது அவசியம். பின்னர் தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும். ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு சுமார் 25 கிலோ விதைகள் தேவைப்படும். விதைத்த 60-80 நாட்களில் பேபி கார்ன் வளர்ந்துவிடும். மிகவும் கவனமாக அறுவடை செய்யவேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 2 to 2.2 லட்ச ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். அப்படியானால் செலவுகள் போக 1.5 to 1.7 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும்.