மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், "வினேஷ், நீங்கள் ஒரு சிறந்த சாம்பியன், நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிப்பவர். இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் வேதனை உணர்வை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. வலுவாக மீண்டு வாருங்கள்! நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்” என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.