பழங்களின் விலை கடும் உயர்வு - மாதுளை ரூ.250க்கு விற்பனை

70பார்த்தது
பழங்களின் விலை கடும் உயர்வு - மாதுளை ரூ.250க்கு விற்பனை
ஆப்பிள், மாதுளை, அன்னாசி போன்ற பழங்கள் டெல்லி, மராட்டியம், கர்நாடகா, கேரளா, நாக்பூர் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. வரத்து குறைந்து ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட அனைத்து பழங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மொத்த பழக்கடைகளில் 10 கிலோ கொண்ட ஒருபெட்டி காஷ்மீர் ஆப்பிள் ரூ.1400க்கு விற்றது. தற்போது ரூ.1600க்கும், ரூ.1600க்கு விற்ற துருக்கி ஆப்பிள் ரூ.1800க்கும் என அனைத்து ரக ஆப்பிள்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் சில்லறை கடைகளில் அதன் விலை ரகம் வாரியாக கிலோ ரூ.300 வரை விற்கப்படுகிறது.

இதே போல் ஆரஞ்சு கிலோ ரூ.140க்கும், மாதுளை கிலோ ரூ.250க்கும். 10 கிலோ கொண்ட மாதுளை ரூ.2500க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.80க்கும், பன்னீர் திராட்சை கிலோ ரூ.100க்கும், கிர்ணி கிலோ ரூ.50க்கும், அன்னாசிபழம் ரூ.90க்கும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி