தேமுதிக பொதுச்செயலாளரான பிரேமலதா விஜயகாந்த் முன்னணி சமூக வலைதளங்களான எக்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றில் கணக்கு தொடங்கியுள்ளார். இது குறித்து அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ள அவர், நண்பர்களுக்கும் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்று முதல கட்சி ரீதியான அறிவிப்புகளும், மக்களுக்கான செய்திகளும், தனிப்பட்ட கருத்துக்கள் போன்ற முக்கிய செய்திகள் சமூக ஊடகங்கள் வழியாக உங்களை வந்து அடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.