போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - தினகரன் வலியுறுத்தல்!

59பார்த்தது
போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - தினகரன் வலியுறுத்தல்!
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், மழை, வெள்ள பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை வழக்கம்போல அலட்சியமாக எதிர்கொள்ளாமல், கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி