பகுஜன் சமாஜ் கட்சியின் வேண்டுக்கோளுக்கு இணங்க 'நீலம் பண்பாட்டு மையம்' சார்பாக சமூக வலைதளங்களில் வாயிலாக நீதிக்கான குரல் எழுப்புவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ம்ஸ்ட்ராங் அரசியல் படுகொலை நடந்து நாளையோடு 50 நாட்கள் கழியப்போகிறது. படுகொலைக்கு நீதி கேட்டும், கண்டித்தும், உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிய கோரியும் ஒருநாள் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டா, எக்ஸ் மூலமாக #JusticeForArmstrong என பதிவு செய்வோம் வாருங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.