திமுக கூட்டணிக்கு பிரபல இயக்குனர் ஆதரவு

60பார்த்தது
திமுக கூட்டணிக்கு பிரபல இயக்குனர் ஆதரவு
‘ஜெய்பீம்’ பட இயக்குனர் த.செ ஞானவேல் தனது ‘X’ தளத்தில் திமுக தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில், “இண்டியா கூட்டணி கட்சிகள் சமூக நீதியையும்,வாக்குறுதிகளையும் காப்பாற்றும் என நம்பிக்கை அளிக்கின்றன. மாநில உரிமை, மொழி உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதும், காத்துக் கொள்வதும் அவசியம். அதனடிப்படையில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட ‘இண்டியா’ கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் படி என்னை அறிந்த அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி