மழை வேண்டி கழுதைக்கும் கழுதைக்கு கல்யாணம்

67பார்த்தது
மழை வேண்டி கழுதைக்கும் கழுதைக்கு கல்யாணம்
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அந்த வகையில் கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் மழை இல்லாமல் நுாற்றுக்கணக்கான ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. மானாவாரி பயிர் செய்வது குறைந்து விட்டது. ஆடு, மாடுகளுக்கு தீவனம் இல்லாததால் இறந்து வருகிறது. இந்நிலையில், அக்கரை செங்கப்பள்ளி, லக்கேபாளையம், எல்.கோவில்பாளையம் ஆகிய கிராம மக்கள் மழை வேண்டி கழுதைக்கு கழுதைக்கு கல்யாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சியை நடத்தினர். பெண் கழுதைக்கு லிப்ஸ்டிக், வளையல், புடவை அணிவித்தும், ஆண் லுதைக்கு வேஷ்டி அணிவித்தும் திருமணம் செய்து வைத்தனர்.

தொடர்புடைய செய்தி