கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட காவலர் (வீடியோ)

1093பார்த்தது
ஹிட் அன்ட் ரன் வழக்குகள் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் லாரி மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தில் லாரி மற்றும் டிப்பர் டிரைவர்கள் வேலை நிறுத்தம் செய்துவந்தபோது போக்குவரத்து பிரச்னையை சரிசெய்ய வந்த போலீஸ்காரரிடம் டிரைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவலர் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டார். மேலும் 20 பேர் கொண்ட கும்பல் காவல் துறை வாகனத்தில் எற முற்பட்ட அந்த காவல் அதிகாரியை சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி