“இனி நியாய விலைக்கடைகள் முழு நேரம் இயங்கும்”

55பார்த்தது
“இனி நியாய விலைக்கடைகள் முழு நேரம் இயங்கும்”
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்ததாவது, “ஊரகப்பகுதிகளில் ரூ. 20 கோடி ஒதுக்கீடு, 10 புதிய மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கீடு. 168 கோடி மதிப்பீட்டில் குழந்தை நேய வகுப்பறைகள் கட்டப்படும். முழு நேரம் இயங்கும் 500 நியாய விலைக்கடைகள் கட்ட ரூ.60 கோடி ஒதுக்கீடு. கசிவுநீர் குட்டைகள் மற்றும் மரம் நடுதல் பணிகளுக்கு ரூ.400 கோடி ஒதுக்கப்படும்” என்றார்.

தொடர்புடைய செய்தி