கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சனிக்கிழமை நடந்த விமான விபத்தில் இந்திய பயிற்சி விமானிகள் இருவர் உயிரிழந்தனர். விமானிகள் அபய் காத்ரு மற்றும் யாஷ்
விஜய் ராமுகடே இருவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள். பைபர் பிஏ-34 செனிகா என்ற இரட்டை எஞ்சின் கொண்ட இலகுரக விமானம், சில்லிவாக் நகரில் மரங்கள் மற்றும் புதர்களில் மோதியதாக கனேடிய காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் இந்தியர்களைத் தவிர மற்றொரு விமானியும் உயிரிழந்தார்.