வீட்டில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் திசை பார்த்து வைக்க வேண்டியது அவசியம் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். அதே போல துடைப்பத்தையும் சரியான திசை பார்த்து வைக்க வேண்டியதும் அவசியம். தெற்கு மற்றும் மேற்கு இடையே துடைப்பத்தை வைப்பது மிகவும் பொருத்தமானது என ஜோதிடம் கூறுகிறது. மேலும், துடைப்பத்தை எப்போதும் படுத்தவாறு வைக்க வேண்டும். இதனால், உங்கள் வீட்டில் லட்சுமி தங்குவதோடு, லட்சுமியின் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.