எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டு மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. 2 விசைப்படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 9 மீனவர்களையும் காங்கேசன் கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை அழைத்துச் சென்றுள்ளது. இலங்கை கடற்படையின் இந்த தொடர் நடவடிக்கையால், தமிழக மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 1 மாதத்தில் மட்டும் 74 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.