பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு

78பார்த்தது
பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு
பாகிஸ்தானில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10.20 குறைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதே போல் அதிவேக டீசல்(HSD) விலை லிட்டருக்கு ரூ.2.33 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அடுத்த 2 வாரங்களுக்கு விலை குறைப்பு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.258.16 ஆகவும், ஒரு லிட்டர் அதிவேக டீசல் விலை ரூ. 267.89 ஆகவும் குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி