ஸ்டைலிஷ் டானாக கலக்கப்போகும் நடிகர் யஷ்?

84பார்த்தது
ஸ்டைலிஷ் டானாக கலக்கப்போகும் நடிகர் யஷ்?
பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்கம் படம் "டாக்ஸிக்". இந்த படத்தில் கதாநாயகனாக கேஜிஃஎப் புகழ் யஷ் நடிக்கிறார். இப்படமானது 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் படம் தொடர்பான புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் நடிகர் யாஷ், ஸ்டைலிஷான டானாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே நடிகர் யாஷ், கே.ஜி.எப் படங்களில் டானாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி