முதியோர் இல்லங்களைக் குறைக்க என்ன செய்யலாம்?

72பார்த்தது
முதியோர் இல்லங்களைக் குறைக்க என்ன செய்யலாம்?
நம் வயதான மாமனார் - மாமியார், அப்பா - அம்மா ஆகியோரை நாம் பாரமாக நினைத்து, முதியோர் இல்லத்தில் சேர்க்க நினைத்தால், இதுபோன்ற நிலை நாளைக்கு நமக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது அல்லவா? வயதானவர்களும் குழந்தைகளைப் போன்றவர்கள்தான். அவர்களை பாசத்துடன் அணுகும்போது, ஒருவேளை அவர்கள் முதலில் நம்மை புரிந்துகொள்ளாமல் நடந்துகொண்டிருந்தால், நாட்கள் செல்லச் செல்ல நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.

முதியோர் இல்லம் பற்றி, நம் வீட்டில் யோசிக்க வேண்டிய நிலை வராது. குடும்பத்தலைவிகளுடன், குடும்பத் தலைவர்களும் சேர்ந்துதான் இந்த நிலையை உருவாக்க வேண்டும். அதில், பெண்களின் பங்கு அதிகமாவே இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி