உ.பி: ஜான்சி ரயில் நிலையத்தில் நேற்று [டிச.06] கோவா நோக்கிச் சென்ற ஹஸ்ரத் நிஜாமுதீன்-வாஸ்கோடகாமா ரயில் இன்ஜின் மீது குதித்த நபர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்த காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளன. அடையாளம் தெரியாத அந்த நபர் நடைமேடையில் போடப்பட்டிருந்த தகர கொட்டகையில் இருந்து குதித்துள்ளார். ரயில் இன்ஜின் மேல் உள்ள மின் கம்பியில் விழுந்த அந்த நபர் உடல் கருகி பலியாகி உள்ளார். இதையடுத்து, போலீஸார் உயிரிழந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.