மதுரை மாவட்டத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டை கிளவியாக இருந்த திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து 1985ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தனி மாவட்டமாக அறிவித்தார் அன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்ஜிஆர். திண்டுக்கல் மாவட்டம் சில காலம் திண்டுக்கல் அண்ணா மாவட்டம் என்ற பெயராலும், சில காலம் காய்தே மில்லத் மாவட்டம் என்ற பெயராலும் மற்றும் மன்னர் திருமலை மாவட்டம் என்ற பெயராலும் அழைக்கப்பட்டு வந்தது.