தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் அவசர ஆலோசனை கூட்டம் பெரம்பலூரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் நந்தகுமார், செயலாளர் சத்யராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் இரட்டிப்பு வரிவிதிப்பினால் தங்களது தொழில் பாதிக்கப்படுவதாக கூறி, தமிழ்நாடு கல்குவாரி கிரசர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வருகின்ற 16ஆம் தேதி முதல் கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.