பெருமாள் மற்றும் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

81பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் பாண்டகபாடி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜ பெருமாள் கோவில், அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான கோவில் புனரமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. கிராம பொது மக்களின் நிதியில் புதுப்பிக்கப்பட்ட இந்த கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த 20 ஆம் த ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலுக்கும், மகா மாரியம்மன் கோவிலுக்கும் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முளைப்பாரி, தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. அதனை தொடர்ந்து மாலையில் விக்னேஷ்வர பூஜை, புண்ணியாவதனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், மிருத்சங்கரனம், அங்குரார்ப்பனம், கலச ஆலாகனம், வேதிகா அர்ச்சனை, துவாரக பூஜை, மூர்த்தி ஹோமம் திரவியா ஹோமம், மகாபூர்ணாஹூதி உள்ளிட்டவற்றுடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இரவு யந்திர ஸ்தாபனம், மூர்த்தி ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாற்றுதலுடன் தீபாராதரையும் நடைபெற்றது, சூரிய நாராயண பூஜை உள்ளிட்ட நிகழ்வுகளுடன் கடம் புறப்பாடு நடைபெற்று ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலுக்கும், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுர கலசங்கள் மற்றும் மூலவருக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி