பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கிடங்கினை காலாண்டு ஆய்வுக்காக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர், அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் (ம) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் கிடங்கில், 224 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 721 கட்டுப்பாட்டு கருவிகளும், 46 வாக்குப்பதிவு உறுதிப்படுத்தும் இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் பட்டியலில் குறிப்பிட்டுள்ளவாறு சரியான எண்ணிக்கையில் உள்ளதா எனவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் போதிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதா எனவும், 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் முறையாக இயங்கி வருகிறதா என்பது குறித்தும், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் சுழற்சி முறையில் குறித்த நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கிடங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனரா என்பது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து அதற்காக பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.