மதுரை: அலங்காநல்லூர் அருகே கல்லணை கிராமத்தில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் மார்கழி மாத உற்சவ விழா நடைபெற்றது. 3 நாட்கள் நடந்த இந்த விழாவில் முதல் நாளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. உலக மக்கள் நன்மைக்காக (டிச., 17) இரவு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று (டிச.,18) காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சிறப்பு வானவேடிக்கையுடன் ஐயப்ப சுவாமி அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது.