வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் ஆட்சியர் ஆய்வு

2228பார்த்தது
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக பாதுகாக்கும் மையத்தில் வைக்கப்பட்டதை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் நேரில் ஆய்வு செய்தார். பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையத்தில் இருந்து சீல் வைக்கப்பட்டு பத்திரமாக, வாக்கு எண்ணும் மையமான பெரம்பலூர் சுற்றுச்சாலை பகுதிகளில் உள்ள ஆதவ் பப்ளிக் பள்ளியில் கணினி மூலம் பதிவு செய்யப்பட்ட பின் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இதனை இன்று காலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது தேர்தல் வட்டாட்சியர்கள், மற்றும் அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி