மறைந்த விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 40வது ஆண்டு நினைவு நாளையொட்டி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், பெரம்பலுார் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு சங்கத்தின் மாநில செயலர் ராஜாசிதம்பரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தப்படி கரும்பு டன் ஒன்றுக்கு 4, 000 ரூபாய் வழங்க வேண்டும்; வீட்டு மின் இணைப்புக்கு மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும்.
பெரம்பலுார் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த மக்காச்சோளம், பருத்தி, சின்னவெங்காயம், மரவள்ளி கிழங்கு, நெல், கரும்பு போன்ற பயிர்களுக்கு முறையாக கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், விவசாயிகள் முக்காடு போட்டும், மழையால் சேதமடைந்த பயிர்களை மாலையாக அணிந்தும், நேற்று நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.