டெலிகிராம் செயலி வாயிலாக ஈரோட்டைச் சேர்ந்த பெண்ணை அணுகி, யூடியூப் விளம்பரங்களுக்கு லைக் போட்டால் பணம் கிடைக்கும் என கூறியுள்ளனர். அதனை நம்பிய அப்பெண்ணிடம் இருந்து ரூ.13.58 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார், கோவையைச் சேர்ந்த சஞ்சய், ராம்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 வங்கி கணக்கு புத்தகங்கள், ஏராளமான சிம்கார்டுகள், செல்போன்களை பறிமுதல் செய்தனர்.