சென்னை ஆயில்சேரியைச் சேர்ந்த ஸ்டாலினின் பெயர் ரவுடி பட்டியலில் உள்ள நிலையில் அவரது அண்ணன் ரெட்டைமலை சீனிவாசன் மீது திருட்டு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கும் ஒரு கும்பல் ஒன்றுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது வெவ்வேறு திசையில் அண்ணன்-தம்பிகள் ஓடி உள்ளனர். அந்த கும்பலும் இருகுழுக்களாக பிரிந்து அவர்களை விரட்டிச் சென்று, கொடூரமாக வெட்டிக் கொன்றது. இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.