மனைவியுடன் வந்து தேர்தலில் வாக்களித்தார் பவன் கல்யாண்

61பார்த்தது
மனைவியுடன் வந்து தேர்தலில் வாக்களித்தார் பவன் கல்யாண்
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று (மே 13) நடைபெற்று வருகிறது. பித்தாபுரம் சட்டமன்ற தொகுதியில் நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் போட்டியிடுகிறார். இந்நிலையில் மங்களகிரி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவி அன்னா லெஷ்னேவாவுடன் வந்து அவர் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றினார். அந்த தொகுதியில் ஜனசேனாவின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் போட்டியிடுகிறது.

தொடர்புடைய செய்தி