கட்சிக் கொடி: பனையூரில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சி.!

56பார்த்தது
கட்சிக் கொடி: பனையூரில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சி.!
தமிழ் திரையுலகின் முண்ணனி நடிகராக இருக்கும் விஜய் தனது மக்கள் இயக்கத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருக்கிறார். வருகிற 22-ம் தேதி தனது கட்சிக்கொடியை அறிமுகம் செய்ய இருக்கிறார். இதற்கான ஒத்திகை சென்னை பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மஞ்சள் நிறத்தில் விஜய் உருவம் பொறித்த கொடி ஒன்று கம்பத்தில் ஏற்றி ஒத்திகை பார்க்கப்பட்டது. இதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியா? என தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி