பாரிஸ் ஒலிம்பிக்கில் ஸ்பெயினுக்கு எதிரான வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய ஹாக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது பெருமையாக உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். அணிக்கான ஸ்ரீஜேஷ் அர்ப்பணிப்பு ஊக்கமளிப்பதாக ராகுல் காந்தி பாராட்டியுள்ளார்.