ஒலிம்பிக் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக தொடங்கிய கால்பந்து போட்டியில் ஆச்சரியமான முடிவு வெளியாகியுள்ளது. கால்பந்து விளையாட்டில் முன்னணி அணியாக இருக்கும் அர்ஜென்டினா தனது முதல் லீக் ஆட்டத்தில் மொராக்கோவிடம் தோல்வியடைந்தது. மொராக்கோ 2-1 என்ற கணக்கில் வென்றது. பாரீஸ் ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் குரூப் 'பி' பிரிவில் விளையாடிய முதல் போட்டி இதுவாகும். மொராக்கோ அணியின் இந்த வெற்றியால் அர்ஜென்டினாவின் காலிறுதிப் பாதை கடினமாகியுள்ளது.