கவிழ்ந்த டெம்போ -காயமடைந்த மல்யுத்த வீரர்கள் (வீடியோ)

72பார்த்தது
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள டவுண்ட் நகரில் டெம்போ ஒன்று வியாழக்கிழமை விபத்துக்குள்ளானது. அதீத வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. பின்னர் அது கவிழ்ந்தது. அப்போது டெம்போவில் 12 மல்யுத்த வீரர்கள் பயணம் செய்தனர். அவர்கள் அனைவரும் விபத்தில் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி