கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் சத்தான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். மருத்துவர்களின் ஆலோசனைப்படி சரியான டயட் முறைகளை பின்பற்றி சில உணவுகளை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுகள் கருப்பை புற்றுநோயாளிகளுக்கு எதிரி. அதிக சர்க்கரை கலந்த உணவுகள் மற்றும் பானங்களை சாப்பிட வேண்டாம். இதையெல்லாம் தவிர்ப்பதன் மூலம் புற்றுநோய் உயிரணு வளர்ச்சியை கட்டுப்படுத்தலாம்.